அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்திக்கும் பிரபல தலைவர்கள் யார்?

Published : Jun 20, 2023, 11:31 AM IST
அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்திக்கும் பிரபல தலைவர்கள் யார்?

சுருக்கம்

அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ள சில பிரபல தலைவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரதமர் மோடியின் பயணம் நியூயார்கில் தொடங்கவுள்ளது. நியூயார்க்கின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில்  இன்று தரையிறங்கும் அவரை வரவேற்க அமெரிக்கா தயாராகி வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பின்னர் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திக்கவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி உரையாற்றவும் உள்ளார்.

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திப்பதுடன், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், சிந்தனை தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

 

 

அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்காவில், வணிகத் தலைவர்களைச் சந்திக்கவும், இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்ளவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனைத் தலைவர்களைச் சந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகம், புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஆழப்படுத்த விரும்புகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

மக்கள் தொடர்பை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக, பிரதமர் மோடி தான் செல்லும் நாடுகளில் உள்ள சிந்தனைத் தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, நியூயார்க்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24க்கும் மேற்பட்ட சிந்தனைத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: முழு விவரம்!

இதில் நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டவர்களும் அடங்குவர். இந்த நிலையில், அமெரிக்காவில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ள சில பிரபல சிந்தனைத் தலைவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எலான் மஸ்க், நீல் டி கிராஸ் டைசன், பால் ரோமர், நிக்கோலஸ் நாசிம் தலேப், ரே டாலியோ, ஃபாலு ஷா, ஜெஃப் ஸ்மித், மைக்கேல் ஃப்ரோமன், டேனியல் ரஸ்ஸல், ஜெஃப் ஸ்மித், எல்பிரிட்ஜ் கோல்பி, டாக்டர் பீட்டர் அக்ரே, டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன் உள்ளிட்டவர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!