பிப்ரவரி 14ல் தமிழ்நாடு, கேரளாவில் எக்கச்சக்க திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி..!

By karthikeyan VFirst Published Feb 12, 2021, 8:27 PM IST
Highlights

பிரதமர் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஏராளமான திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 14ம் தேதி காலை 11.15 மணிக்கு சென்னையில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, பிற்பகல் 3.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் திட்டங்கள்:

ரூ.3770 கோடியில் 9.05 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட நீட்சியை தொடங்கிவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.  

சென்னை கடற்கரை  மற்றும் அத்திப்பட்டு இடையே 22.1 கிமீ தொலைவிற்கு ரூ.293.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்துவைக்கிறார்.

விழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் இடையேயான ரயில்வே எலக்ட்ரிஃபிகேஷன் சிங்கிள் லைனை தொடங்கிவைக்கிறார். மின்மயப்படுத்தியதால் சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணத்தில் ஒருநாளைக்கு ரூ.14.61 லட்சத்தை சேமிக்க முடியும்.

 Arjun Main Battle Tank (MK-1A)ஐ இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறார். CVRDE, DRDO, 15 கல்வி நிறுவனங்கள், 8 லேப்கள் மற்றும் பல சிறு குறு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டவை.

அணைக்கட்டு ஏரி புதுப்பித்தல் திட்ட விரிவாக்கத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த திட்டம் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு உதவும். ரூ.2,640 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

சென்னை ஐஐடியில் டிஸ்கவரி கேம்பஸுக்கான அடிக்கல் நாட்டுகிறார். 2 லட்சம் சதுர கிமீ தொலைவிற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் திட்டங்கள்:

பிபிசிஎல்லின் ப்ரொபைலீன் டெரைவேடிவ் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் அக்ரைலேட்ஸ், அக்ரிலிக் ஆசிட், ஆக்ஸோ ஆல்கஹால் ஆகியவற்றை உற்பத்தி செய்வதன் மூலம், அதை இறக்குமதி செய்யும் ரூ.4000 கோடி சேமிக்கப்படும்.

கொச்சி துறைமுகத்தில் சர்வதேச க்ரூஸ் டெர்மினல் “சாகரிகா”வை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி. ரூ.25.72 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் சுற்றுலா மேம்படும்.

கொச்சி ஷிப்யார்டில் மரைன் எஞ்சினியரிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை திறந்துவைக்கிறார். 

சாகர்மாலா திட்டத்தின் கீழ், கொச்சி துறைமுகத்தில் தென் நிலக்கரி பெர்த் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். ரூ.19.19 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேற்கண்ட திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.
 

click me!