‘சோழர்கால கடற்படையை பெருமையாகப் பேசிய பிரதமர் மோடி’

Asianet News Tamil  
Published : Nov 26, 2017, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
‘சோழர்கால கடற்படையை பெருமையாகப் பேசிய பிரதமர் மோடி’

சுருக்கம்

PM Narendra Modi salutes Indian Navy remembers women warriors of Chola Dynasty

8ம் நூற்றாண்டில் இருந்த தமிழர்களின் சோழர் கால கடற்படையின் உலகின் சிறந்த கடற்படையாக இருந்தது என்று மான் கி பாத் வானொலி உரையின்போது பிரதமர் மோடி பெருமையாகக் குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது.

நமது நதிகளும், கடலும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உலக நாடுகளுக்கு நுழைவு வாயிலாக உள்ளன. நமது நாட்டுக்கு கடலுடன் உடைக்க முடியாத உறவு உள்ளது. பெரும்பாலான கடற்படையில் பெண்களை தாமதமாக அனுமதித்தன என்பதை சிலர் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால், 8 அல்லது 9 நூறாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் கடற்படை, உலகின் சிறந்த கடற்படையாக செயல்பட்டது. அதில், அதிகமான பெண்கள் முக்கிய பங்காற்றினர். கடற்படை பற்றி பேசும்போது சத்ரபதி சிவாஜியை மறக்க முடியாது. மராத்தா கடற்படையில், பெரிய மற்றும் சிறிய கப்பல்கள் இருந்தன.

அவரின் கடற்படை எதிரிகளை தாக்குவதுடன், அவர்களின் தாக்குதலை முறியடித்தது என்றார். மேலும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நாமனைவரும் கடற்படை நாளைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தியக் கடற்படை, நமது கடலோரங்களைக் காத்துப் பாதுகாப்பளிக்கிறது. நான் கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

கனவு நனவாகுது! 2027 ஆகஸ்ட் 15-ல் சீறிப்பாயும் புல்லட் ரயில்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது! வாழும்போதே கிரானைட் சமாதி கட்டிய துபாய் ரிட்டன் தாத்தா!