தெலுங்கானா தேர்தல் பணி.. இடையில் திருமலையில் ஸ்வாமி தரிசனம் - இன்று பல நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர்!

By Ansgar R  |  First Published Nov 27, 2023, 11:55 AM IST

Telangana Election 2023 : ரிது பந்து திட்டத்தை வழங்குவதற்கான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ரத்து செய்தது. பிஆர்எஸ் தலைவர் ஹரிஷ் ராவ், மாதிரி நடத்தை விதிகளை மீறி, நவம்பர் 28ஆம் தேதி விவசாயிகளுக்கு நிதி மாற்றப்படும் என்று பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து இது வந்தது.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது இந்த வாக்கு பதிவுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அங்கு கடும் போட்டி நிலவுவது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கின்றது அதற்கான வாக்குப்பதிவு வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது இன்னும் மூன்று நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பலவும் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதற்கு இடையில் நேற்று நவம்பர் 26 ஆம் தேதி திருமலைக்கு வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களின் நல் வாழ்விற்கும் உடல் நலத்திற்கும் தான் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Om Namo Venkatesaya!

Some more glimpses from Tirumala. pic.twitter.com/WUaJ9cGMlH

— Narendra Modi (@narendramodi)

இன்று காலை 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்குச் சென்ற பிரதமர், அதைத் தொடர்ந்து 11 மணிக்கு மகபூப்நகரிலும், மதியம் 1 மணிக்கு கரீம்நகரிலும், மாலை 4 மணிக்கு கச்சேகுடாவில் சாலைக் காட்சியிலும் பேரணி நடத்துகிறார்.

click me!