ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும்?

By Dinesh TG  |  First Published Nov 27, 2023, 9:41 AM IST

மேம்பட்ட செமிகண்டக்டர்கள் மற்றும் AI சிப் போன்ற அதிநவீன தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா சமீபத்தில் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.


மேம்பட்ட செமிகண்டக்டர்கள் மற்றும் AI சிப் போன்ற அதிநவீன தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா சமீபத்தில் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது மிகவும் அவசியமானவை என்றும் கூறியிருக்கிறது.

இந்த நடவடிக்கை பெரும்பாலும் சீன நிறுவனங்களை இலக்காகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இறக்குமதி செய்யும் தொழில்நுட்பங்களை சீனா ராணுவத்துக்கும் பயன்படுத்தி வருகிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வழியில், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை விற்கும் ஜப்பான், நெதர்லாந்து போன்ற பிற நாடுகளும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

Latest Videos

undefined

ஆனால், இந்த நாடுகள் குறிப்பாக எந்த நாட்டையும் குறிப்பிடாமல் கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுத்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் இருந்து தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பிரத்யேக லைசென்ஸ் பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியா மற்ற நாடுகளுடன் தொழில்நுட்பத்துறையில் கூட்டணி அமைத்துவரும் சூழலில் இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா - சீனா

சீனாவின் ராணுவ-சிவில் இணைவு திட்டம் (MCF) தான் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. சீனா சிவில் தொழில்நுட்பங்களைப் ராணுவ பயன்பாடுகளுக்கும் எடுத்துக்கொள்கிறது. இதனால், அமெரிக்க வர்த்தகத் துறை, அக்டோபர் 2022 இல் ஏற்றுமதி கட்டுப்பாட்டை அறிவிக்கும்போதே இதைக் குறிப்பிட்டது. சீனா பேரழிவு ஆயுதங்கள் உட்பட மேம்பட்ட ராணுவ அமைப்புகளை உருவாக்க நவீன தொழில்நுட்பத்தைப் கையாளுகிறது என்று கூறியது.

பின்னர், 2023 அக்டோபரில் அமெரிக்கா மீண்டும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தது. அப்போது, பேட்டரி துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் செயற்கை கிராஃபைட்டை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது.

ஏற்றுமதி கட்டுப்பாட்டு

ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து போன்ற பிற நாடுகள் இணைத்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவைப் போல் இல்லாமல், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு தொடர்பாக எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இலக்காக அறிவிக்கவில்லை. அதாவது, இந்த நாடுகளில் நியமிக்கப்பட்ட ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஆணையம், ஏற்றுமதி செய்யும் நாட்டைப் பொறுத்து முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இந்தியா கவனமாக இருக்க வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பங்களை தீய நோக்கங்கள் கொண்ட மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிப்ப நல்லது. சில அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்கள், மேம்பட்ட மைக்ரோசிப்களை இந்தியா வழியாக அனுப்பி, அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.

இந்தியா

பெரும்பாலான நாடுகளில் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் தேடலானது சவாலானதாக இருக்கும். மார்ச் 2023 இல் இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட வர்த்தக உரையாடல் நடந்துள்ளது. மேலும், அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது. சமீப காலத்தில் அமெரிக்கா - இந்தியா உறவுகளில் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து உயர் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிலையான தீர்வு காண இதுவே வசதியான நேரமாக இருக்கக்கூடும்.
 

click me!