ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்த பிரதமர்..! யாரெல்லாம் பங்கேற்றார்கள் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 23, 2022, 8:10 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் மதத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பழங்குடியின தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் மதத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பழங்குடியின தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால்,  அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முர்மு வெற்றி எதிரொலி... 11 சட்டமன்ற தேர்தல்களில் தட்டித் தூக்கப் போகும் பாஜக... செம்ம மாஸ்டர் பிளான்.

இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க;-  தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15வது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

click me!