கல்லூரி மாணவ மாணவியர் ஒன்றாக அமர்வதை தடுக்க பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளை உடைத்த உள்ளூர்வாசிகளுக்கு எதிராக மாணவர்கள் நூதன போராட்டம் ஈடுபட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
கல்லூரி மாணவ மாணவியர் ஒன்றாக அமர்வதை தடுக்க பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளை உடைத்த உள்ளூர்வாசிகளுக்கு எதிராக மாணவர்கள் நூதன போராட்டம் ஈடுபட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. கேரளா, திருவனந்தபுரத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றின் முன்பு பேருந்து நிறுத்தம் இருந்துள்ளது. இங்கு நீண்ட இருக்கைகளுடன் நிழற்குடை வசதியும் அமைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள இருக்கையில் கல்லூரி மாணவ மாணவிகள் அமர்வது வழக்கம். மாணவ மாணவியர் சேர்ந்து உக்காருவது அங்கு வசிக்கும் மக்கள் சிலர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி
இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு இரவாக நீண்ட இருக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஒருவர் மட்டுமே அமரும் வகையில் தனித்தனி இருக்கையாக மாற்றியுள்ளனர். இதை கண்ட மாணவ மாணவியர் இதுக்குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததோடு இதற்கு கண்டனமும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இருக்கை துண்டிக்கப்பட்டதை கண்டித்து மாணவ மாணவியர் அந்த பேருந்து நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதற்காக இந்த இருக்கைகள் துண்டிக்கப்பட்டதோ அதையே செய்து நூதன முறையில் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: அலர்ட்!! கேரளாவில் பரவும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..
அதாவது, துண்டிக்கப்பட்ட இருக்கையில் மாணவர்கள் அமர்ந்து கொள்ள அவர்களின் மடியில் மாணவிகள் நெருக்கமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்ட சக மாணவர்களும் இதில் கலந்துக்கொண்டதால் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுக்குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது சம்பந்தமான வீடியோ, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா வரை சென்றது.
இதையும் படிங்க: முர்மு வெற்றி எதிரொலி... 11 சட்டமன்ற தேர்தல்களில் தட்டித் தூக்கப் போகும் பாஜக... செம்ம மாஸ்டர் பிளான்.
இதை அடுத்து நேரில் பேருந்து நிறுத்ததிற்கு வந்த அவர், அவ்விடத்தை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை ஏற்க முடியாது. இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறி திளைப்பவர்கள், காலம் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும். பாழடைந்த இந்த பேருந்து நிறுத்தம் பொதுப்பணித்துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.