இந்தியாவில் 5G சேவை பயன்பாட்டுக்கு வரும் நிலையில் 5G சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் 5G சேவை பயன்பாட்டுக்கு வரும் நிலையில் 5G சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் 5G சேவைக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. 5G அலைவரிசை மூலம் தற்போது உள்ள 4G அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3G-யை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சேவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு - ஆளுநர் உறுதி
இந்த நிலையில் அன்மையில் மத்திய அரசு நடத்திய 5G அலை கற்றை ஏலத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. 5G சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனிடையே இந்தியாவில் 5G சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘ரிசர்வ் பேங்கை-ரிவர்ஸ் பேங்க்’ என கள்ளநோட்டில் அச்சிட்டு போலீஸிடம் சிக்கிய கும்பல்
இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6 ஆவது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 5G தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும் என்றும் இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.