புதுச்சேரி மின்வாரியம் தனியார் மயமானலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சட்டபூர்வ பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வாரியத்தை முழுமையாக தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துறை அதிகார்கள், பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் மின்தடை தொடர்கதையாகியுள்ளது.
ஆங்காங்கே ஏற்படும் மின்தடையை சரி செய்ய பணியாளர்கள் இல்லாததால் பல பகுதிகளிலும் 8 மணி நேரம், 10 மணி நேரம் என்றளவில் மின்தடை நீடிக்கிறது. தொடர் மின்கதையால் பொருமை இழக்கும் பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து சாலை மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்பட வேண்டும் - ஆளுநர் தமிழிசை
இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து பேசினார். உடன் தலைமை செயலாளர், மின்துறை செயலாளர் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் முதலமைச்சரை சந்தித்து பேசினேன்.
புதுவை ECR சாலையில் மறியல்: 2 கி.மீ. அணிவகுக்கும் வாகனங்கள்
இந்த சந்திப்பில் நூலகம், மருத்துவமனை மற்றும் உலகத் தமிழ் மாநாடு சம்பந்தமாக பேசப்பட்டது. மேலும் மின் துறை தனியார் மயமாவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிக்கு சட்டபூர்வ பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். ஆளுநரின் விளக்கத்தை ஏற்று பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.