புலிகள் திட்ட 50 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 20 கி.மீ. ஜீப் சவாரி செய்தார்.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி 20 கி.மீ. தொலைவுக்கு ஜீப் சவாரி மேற்கொண்டு வனப்பகுதியைப் பார்வையிட்டார். பந்திப்பூர் காப்பகத்தில் புகழ்பெற்ற புலிகள் மற்றும் யானைகள் தவிர, கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ளநரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை பிரதமர் மோடி தனது ஜீப் சவாரியின்போது பார்வையிட்டார்.
பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். காப்பகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னணி களப்பணியாளர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரையாடுகிறார்.
சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!
Prime Minister arrives at in pic.twitter.com/CBP4Cud75C
— DD News (@DDNewslive)மேலும், சாமராஜநகர் மாவட்டத்தின் அண்டை தமிழக எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று, யானைகள் முகாமில் உள்ள காவடிகள் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடுகிறார். சமீபத்தில் முடிவடைந்த 5வது சுழற்சி மேலாண்மை திறன் மதிப்பீட்டுப் பயிற்சியில் அதிக மதிப்பெண் பெற்ற புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்களுடன் அவர் உரையாடுகிறார்.
அமிர்த காலத்தின்போது புலிகள் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை திட்டத்தை அவர் வெளியிடுகிறார். மேலும் சர்வதேச பிக் கேட் அசோசியேஷன் (ஐபிசிஏ) என்ற சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் தொடங்குவார். இந்தக் கூட்டமைப்பு புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சீட்டா ஆகிய ஏழு விலங்குகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்த பிரதமர் மோடி; யானைகளுக்கு கரும்பு வழங்கி உற்சாகம்!
PM Shri ji at the inaugural session of commemoration of 50 years of Project Tiger in Karnataka https://t.co/5zfUS6qcKR
— Bhupender Yadav (@byadavbjp)பின்னர் மைசூரில் நடைபெறும் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடுகிறார். இந்த விழாவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் 'புலிகள் திட்டம்' நினைவு நாணயமும் வெளியிடப்படும்.
பந்திபூர் புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கடந்த 3 நாட்களாக புலிகள் சரணாலயத்திற்குள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 1, 1973 அன்று 'புலிகள் திட்டம்' தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், இத்திட்டம் 18,278 சதுர கிமீ பரப்பளவில் ஒன்பது புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, 53 புலிகள் காப்பகங்கள் சுமார் 75,000 சதுர கி.மீ பரப்பளவிற்குப் பரவியுள்ளது. இது இந்தியாவின் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் சுமார் 3,000 புலிகள் உள்ளன. இது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகம். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
ராஜஸ்தானில் பயங்கரம்: பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து தீ வைத்துக் கொலை