அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Published : Jan 22, 2024, 12:52 PM IST
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சுருக்கம்

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் ஜனவரி 12 முதல் தொடங்கியது. கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டைக்கான பூஜைகள் நடந்து வருகின்றன. பூஜைகளை பிரதமர் மோடி செய்து வருகிறார்.

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: பூஜைகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி!

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய ராமர் சிலை ஏற்கனவே கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கருவறையில் வைக்கப்பட்டுள்ள அச்சிலைக்கு ‘பிரான் பிரதிஷ்டை’ பூஜைகளை செய்த பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!