பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக ஜார்கண்ட் மாநிலம் செல்லவுள்ளார். அம்மாநிலத்தில் உள்ள பிர்சா முண்டாவின் கிராமத்துக்கும் அவர் செல்லவுள்ளார்
பிரதமர் மோடி வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். நவம்பர் 15ஆம் தேதி காலை 9:30 மணியளவில், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அதன்பிறகு, பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான உலிஹாட்டு கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.
பிர்சா முண்டா பிறந்த ஊரான உலிஹட்டு கிராமத்திற்குச் செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார். தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் மூன்றாவது ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் 2023 கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். நிகழ்ச்சியின் போது, ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’வை தொடங்கி வைப்பதுடன், சுமார் ரூ.24,000 கோடி மதிப்பீட்டில், பிரதான் மந்திரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் இயக்கத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக டேவிட் கேமரூன் நியமனம்!
மேலும், பி.எம்.கிசான் 15ஆவது தவணையை வெளியிடும் பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.