உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி திறந்து வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி திறந்து வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2024 புத்தாண்டில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் 18வது ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு அனைவரின் பார்வையும் இருக்கும் நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. ஆடம்பரமாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22, 2023 அன்று திறந்து வைக்கப் போகிறார்.
ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!
கட்டுமானப் பணி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு எப்போது என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் பிரமாண்ட திறப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மற்ற முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு மூலைகளில் இருக்கும் ராமர் பக்தர்கள் பல வகைகளில் பங்களித்து வருகின்றனர்.
சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்! இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படம்!