இந்தியாவின் வழிக்கு வந்த இங்கிலாந்து…. போரிஸ் ஜான்சனுக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி..!

By manimegalai aFirst Published Oct 11, 2021, 9:18 PM IST
Highlights

2 தவனை தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியர்களை கட்டாய தனிமைப்படுத்துவோம் என்று அடம்பிடித்த இங்கிலாந்து, இந்தியாவின் பதிலடியால் வழிக்கு வந்தது.

தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியர்களை கட்டாய தனிமைப்படுத்துவோம் என்று அடம்பிடித்த இங்கிலாந்து, இந்தியாவின் பதிலடியால் வழிக்கு வந்தது.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து குறிப்பிட்ட அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்தவகையில் இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அந்த அரசு கூறியது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் எங்களால் ஏற்க முடியாது என இங்கிலாந்து அடம்பிடித்தது. இதையடுத்து இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அங்கிருந்து இந்தியா வருபவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து வழிக்கு வந்த இங்கிலாந்து அரசு, இந்தியர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நான்கு நாட்கள் கழித்து இங்கிலாது பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். அப்போது, இந்தியர்களை தனிமைப்படுத்த மாட்டோம் என்ற அறிவிப்புக்கு போரிஸ் ஜான்சனுக்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். அதேபோல் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை, சர்வதேச விமான சேவையை தொடங்குவது உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை பற்றியும் இரண்டு பிரதமர்களும் ஆலோசித்ததாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. தலிபான்களுடன் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறையின் அவசியத்தை பற்றியும் மோடி மற்றும் ஜான்சன் விவாதித்துள்ளனர்.

click me!