தமிழ்நாட்டிற்கு இத்தனை டி.எம்.சி. தண்ணீர் வேண்டும்…. காவிரி ஒழுங்காற்று குழுவிடம் கறாராக கூறிய அதிகாரிகள்!

By manimegalai aFirst Published Oct 11, 2021, 5:44 PM IST
Highlights

செப்டம்பர் மாதம் வரை 26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. அக்டோபர் மாதத்திற்கான பங்கீட்டிலும் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் வரை 26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. அக்டோபர் மாதத்திற்கான பங்கீட்டிலும் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

காவிரி ஆறு மூலம் பாசன வசதிபெறும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தண்ணீரை முறையாக பங்கிட்டு கொடுக்க அமைக்கப்பட்ட காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாஅக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறும். அந்தவகையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு உறுப்பினர் , திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம்  காவேரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன், செயற்பொறியாளர் கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் அளவு, அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, வானிலை நிலவரம் குறித்து இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில அரசுகள் கோரிக்கைகளை முன்வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் வரை நிலுவையில் உள்ள 26 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அத்துடன் அக்டோபர் மாதத்திற்கான 20 டி.எம்.சி. தண்ணீரில் இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆகவே நிலுவையில் உள்ள 40 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் எண்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கறாராக தெரிவித்துள்ளனர்.

click me!