வடக்கத்தான் துப்பும் எச்சில் கறையை அகற்ற ஆண்டு தோறும் ரூ.1200 கோடி செலவு... ரயில்வேயின் மாற்றுத் திட்டம்..!

Published : Oct 11, 2021, 01:13 PM IST
வடக்கத்தான் துப்பும் எச்சில் கறையை அகற்ற ஆண்டு தோறும் ரூ.1200 கோடி செலவு... ரயில்வேயின் மாற்றுத் திட்டம்..!

சுருக்கம்

ஆங்காங்கே எச்சில் துப்பி மற்றவர்களை முகம் சுழிக்க வைப்பர். அந்தக் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்து வந்துள்ளது. 

வடமாநிலத்தவர்கள் பெரும்பாலானோர் குட்கா, பான், புகையிலை பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் அனைத்து பொது இடங்களிலும் அவற்றை பயன்படுத்துவார்கள். இதனால், கண்ட இடங்களிலும் எச்சில் துப்புவார்கள். இதனால் அந்த இடம் அசுத்தமாகவும் கறையுடனும் காணப்படும். அதிலும் ரயில் பயணங்களின் போது அதிகம் புகையிலை, பாக்கு பயன்படுத்தும் அவர்கள் ஆங்காங்கே எச்சில் துப்பி மற்றவர்களை முகம் சுழிக்க வைப்பர். அந்தக் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்து வந்துள்ளது.

இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சி ஒன்றை ரயில்வே மேற்கொண்டுள்ளது. அதாவது கையளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட் ஒன்று ரயில் நிலையங்களில் விற்கப்படவுள்ளது. பான் மசாலா, வெற்றிலை எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட முடியும். எளிதில் மங்கிவிடும் பொருளால் இது செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. 5 முதல் 10 ரூபாய்க்குள் இருக்கும் இந்த பாக்கெட்டை 15 முதல் 20 முறை வரை கூட பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

மேற்கு, மத்திய, வடகு ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்களின் போது சற்றே கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இந்தியாவில் பொது இடங்களில் எச்சில் துப்புவது பெரும் தொல்லையாக இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!