இறுகிய முகத்துடன் போன் போட்ட பிரதமர் மோடி! யாருக்கு? ரயில் விபத்து நடந்த இடத்தில் சம்பவம்

By Raghupati RFirst Published Jun 3, 2023, 8:04 PM IST
Highlights

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது.

இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

பகல் 2 மணி நிலவரப்படி  288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ரயில் விபத்துக்குள்ளான பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் பகுதியில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.  காயமடைந்தவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. வேதனையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் படும் வலியை நான் உணர்கிறேன்.  அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஒடிசா ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விரிவான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க ஒன்றிய அரசு உதவும்.  விபத்து நடந்த பாதையில் ரயில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அரசு ஒருபோதும் கைவிடாது. மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி” என்றார்.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே உள்துறை அமைச்சர் அமித்ஷாவோடு மொபைல் மூலம் பேசினார். ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் இதில் ஈடுபடுத்தி, இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் பார்த்துக்கொள்ள உத்தரவிட்டார். இதை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளர் உடனும் பிரதமர் மோடி மொபைல் மூலம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

click me!