பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியுடன் மிக்ஜம் புயல் பாதிப்புகளைக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியுடன் மிக்ஜம் புயல் பாதிப்புகளைக் கையாள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார் என்றும் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்ஜிங் சவுத்! தென் மாநிலங்களை இணைக்க ஆர்.எஸ்.எஸ். புதிய திட்டம்!
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மிக்ஜம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்திலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்கள் யாரும் கடற்பகரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.