PM-KISAN நிதி இதுவரை ரூ. 2.60 லட்சம் கோடி விநியோகம்; 14வது தவணையை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரை!!

By Dhanalakshmi G  |  First Published Jul 27, 2023, 12:55 PM IST

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 14வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். 


ராஜஸ்தானில் உள்ள சிகாரில் நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளின் கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தினார். 14வது தவணையை வெளியிட்டு பேசிய அவர், ''பிரதமர் கிசான் சம்மன் நிதி என்பது உலகின் மிகப்பெரிய திட்டமாகும். இதில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும். 14வது தவணை வரை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 14 வது தவணை இன்று வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வரை நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். பிப்ரவரி 1, 2019 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால யூனியன் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை பியூஷ் கோயல் வெளியிட்டு இருந்தார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கான அனைத்து பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. 

PM Modi 72nd Birthday: பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!

விவசாய நிலத்தை தங்கள் பெயரில் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். பிஎம்-கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வரும் 14வது தவணை தொகை ஆதார் மற்றும் என்பிசிஐ-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பயனாளிகள் உள்ளூர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று NPCI உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் அடுத்த தவணையைப் பெறுவதற்காக, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் (IPPB) புதிய (DBT இயக்கப்பட்ட) கணக்கைத் திறக்கலாம். 14 வது கட்ட நிதியைப் பெறுவதற்கு பயனாளிகள் தங்களது eKYC-ஐ முடித்திருக்க வேண்டும். 

PM Kisan : ரூ.2,000க்கு பதிலாக ரூ.4,000 கிடைக்கும்.. கிசான் திட்டத்தின் 14வது தவணை..எப்படி வாங்குவது?

தங்கள் பதிவு செய்யப்பட்ட ஆதார் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி eKYC நீங்களாகவே சரி பார்க்கலாம். மற்றும் PM-கிசான் இணையத்திலும் சரி பார்க்கலாம். பயனாளிகள் PMKISAN GOI செயலியைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைச் சரிபார்க்க தங்கள் ஆதார் மொபைல் எண்ணுடன் உள்நுழையலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PM கிசான் 14வது தவணைக்கான தகுதி எவ்வாறு சரிபார்ப்பது: 

1. pmkisan.gov.in இணையத்திற்கு செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Beneficiary Status’ under the ‘Farmers Corner’ சென்று தேர்வு செய்யவும் 

3. பதிவு செய்யப்பட்ட ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை பதிவுடம் 

4. ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்

5. தவணை குறித்த தகவலை பயனாளி பெறலாம் 

PM Kisan பணம் வரவில்லையா?

உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால், PM கிசான் ஹெல்ப்லைன் எண் 155261, PM கிசான் லேண்ட்லைன் எண் 011—23381092, 23382401, PM கிசான் கட்டணமில்லா எண் 18001155266, PM Kisan new helpline 011-24300606 @ pmekisan-mail d gov.inல் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

click me!