பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் உரை ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பு!

Published : Apr 29, 2023, 06:30 PM ISTUpdated : Apr 29, 2023, 06:37 PM IST
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் உரை ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பு!

சுருக்கம்

பிரதமர் மோடியின் மன் கி பாத் 100வது எபிசோட் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பப்பட்ட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' 100வது எபிசோட் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

"பிரதமர் மோடியின் மன் கி பாத்தின் 100வது எபிசோட் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படும். இந்த வரலாற்று தருணத்திற்கு தயாராகுங்கள்!" என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு ட்விட்டரில் கூறியுள்ளது.

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000! 14வது தவணை எப்போது கிடைக்கும்?

மோடியின் மாதாந்திர வானொலி உரையின் 100வது எபிசோட் இந்திய நேரப்படி நாளை (ஏப்ரல் 30) காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்படும். இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்திலும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு இந்த உரை ஒலிபரப்பாகும். ஐ.நா.வின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் இதுவரை நடக்காத இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்.

பிரதமரின் உரை நிகழ்ச்சி பற்றி கூறியுள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு. "மன் கீ பாத் ஒரு மாதாந்திர தேசிய பாரம்பரியமாக மாறியுள்ளது. இது மில்லியன் கணக்கானவர்களை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்கத் தூண்டுகிறது" என்று தெரிவித்துள்ளது.

கேரளா அரசின் தோல்வி இது.. மத்திய அரசின் தோல்வி என்று கூறுவதா? பாஜக எம்.பி பிரகாஷ் ஜவடேகர் காட்டம்

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், மன் கி பாத் 100வது எபிசோட் ஒளிபரப்பாகும். நியூஜெர்சியில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் சார்பிலும் 1:30 மணிக்கு பிரதமரின் உரையை ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' வானொலியில் உரை முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று ஒலிபரப்பப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க்கில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த அரைமணிநேர உரை நிகழ்ச்சியின் 100வது எபிசோட் நாளை ஒலிபரப்பாகிறது.

ANI, NDTV செய்தி நிறுவனங்களின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 13 வயதுகூட ஆகாததால் நடவடிக்கை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை