பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000! 14வது தவணை எப்போது கிடைக்கும்?

Published : Apr 29, 2023, 05:14 PM ISTUpdated : Apr 29, 2023, 05:23 PM IST
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000! 14வது தவணை எப்போது கிடைக்கும்?

சுருக்கம்

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் அடுத்த தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரதமரின் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்த விவசாயிகள் 14வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 13வது தவணைத் தொகை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட்டது. இப்போது 14வது தவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் 14வது தவணைத் தொகை மே மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும், இத்தகவல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

கிசான் திட்டம்

கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் கிடைக்கும். அதாவது ஆண்டுதோறும் ரூ.6000 கொடுக்கப்படுகிறது. இதன்படி இத்திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களில் 3 தவணைகளாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கொளுத்திய வெயில்.. காரில் இருந்து மயங்கி விழுந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா - வைரல் வீடியோ.!

கிசான் திட்டத்தில் 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

1. முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து , 'Farmer’s corner என்பதைக் கிளிக் செய்யவும்.

2. பிறகு,  'New Farmer Registration' (புதிய விவசாயிகள் பதிவு) என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

3. ஆதார் விவரங்களை உள்ளிட்ட பின்னர் 'Yes' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. இதற்குப் பிறகு, கிசான் திட்ட விண்ணப்பப் படிவம் 2023 இல் கேட்கப்பட்ட தகவலைக் கொடுக்க வேண்டும்.

கிசான் திட்டத்தில் பயனாளர் நிலையைச் சரிபார்ப்பது எப்படி?

1. முதலில் www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யவும்.

2. பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Former's Corner' ஐ கிளிக் செய்ய வேண்டும்

3. இதற்குப் பிறகு, 'Beneficiary Status' என்பதை கிளிக் செய்க.

4. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, 'Get Data' என்பதை க்ளிக் செய்தால் பயனாளர் நிலை திரைக்கு வரும்.

கிசான் திட்டத்தில் பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்ப்பது?

1. முதலில் www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்யவும்.

2. பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Beneficiary list' ஐ கிளிக் செய்ய வேண்டும்

3. இங்கே, மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு 'Get report' என்பதை கிளிக் செய்யதால், பயனாளிகளின் பட்டியல் திரையில் காட்டப்படும்.

ரூ.28,000 கோடி அந்நிய முதலீடு விவகாரம்... பைஜு அலுவலகங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை