இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

By manimegalai aFirst Published Sep 27, 2021, 9:45 AM IST
Highlights

தனிநபர் பெற்று மருத்துவ சிகிச்சைகள் உள்படமருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக மின்னணு சுகாதார அட்டை இருக்கும்.

தனிநபர் பெற்று மருத்துவ சிகிச்சைகள் உள்படமருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக மின்னணு சுகாதார அட்டை இருக்கும்.

இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயமாக மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த திட்டமானது சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்னணு மருத்துவ அட்டை திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய சுகாதார அட்டை திட்டத்தை நாடு முழுவதும் காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Latest Videos

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், இன்றைய தினம் இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னணு மருத்துவ திட்டம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும். தனிநபர் பெற்று மருத்துவ சிகிச்சைகள் உள்பட மருத்துவர்கள் சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக அட்டை இருக்கும். மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக மருத்துவ அடையாள அட்டை தரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தில் மருத்துவ ஆவணங்களை அணுகவும், பரிமாறவும் மக்களிடம் முன் அனுமதி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!