திரையரங்குகள், கேளிக்கை, மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி…!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 9:31 AM IST
Highlights

கொரோனா பரவல் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.

கொரோனா பரவல் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள், மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது விதிக்கபப்ட்ட ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரையில் அத்தியாசியமற்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்து வருகின்றன. அந்தவகையில் கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

கர்நாடாகாவில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், திரையரங்குகள், மதுபானிய விடுதிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலித்த கர்நாடக அரசு,  அக்டோபர் 1-ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் திரையரங்கங்கள் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

அதேபோல், கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகள், உணவகங்கள், சொகுசு விடுதிகள், திருமண மண்டபங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகளில் 100 சதவீத குழந்தைகளை அமர வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,  1 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!