வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு…… தாலிபானி பா.ஜ.க.-வின் கதையை முடிப்பேன் என மம்தா பானர்ஜி சபதம்..!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 9:08 AM IST
Highlights

இத்தாலியில் நடைபெறும் உலக அமைதிக்கான மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இத்தாலியில் நடைபெறும் உலக அமைதிக்கான மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.-வுகு எதிர்க்கட்சியான காங்கிரஸை விட, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தான் கடும் போட்டியாக இருந்து வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவானால் மம்தான் பிரதமர் வேட்பாளர் என்ற அளவில் பேசப்படுகிறது. பா.ஜ.க. – திரிணாமுல் இடையேயான் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது மத்திய அரசின் செயல் மம்தாவை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவுள்ள உலக அமைதிக்கான மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜெர்மனி அதிபர், கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் இத்தாலி செல்ல மம்தாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துவிட்டது. ஒரு முதலமைச்சர் இத்தகைய மாநாட்டில் பங்கேற்பது தகுதிவாய்ந்ததாக இருக்காது என்றும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடி, பொறாமையின் காரணமாகவே தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மம்தா ஆவேசமடைந்துள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்காக தாம் ஏங்குவதில்லை என்றும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவே அமைதி மாநாட்டிற்கு வர சம்மதம் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார். இந்துக்களுக்காக பேசும் பிரதமர் மோடி, ஒரு இந்துப் பெண்ணான தம்மை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது ஏன் என்றும் மம்தா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பா.ஜ.க.-வை தாலிபானி என்று விமர்சித்த மம்தா, அக்கட்சியால் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் நாடு முழுவதும் பா.ஜ.க.-வின் கதையை தான் முடிப்பேன் என்றும் அவர் சபதமிட்டுள்ளார். ஏற்கெனவே மம்தா பானர்ஜி சீனா செல்லவும் மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!