வந்துட்டாரு குலாப்… இன்னிக்கு கரையை கடந்து போயிடுவாரு…. வானிலை மையம் வார்னிங்…

By manimegalai aFirst Published Sep 26, 2021, 6:52 AM IST
Highlights

வங்கக்கடலில் குலாப் புயல் உருவாகி விட்டதாகவும் இன்று மாலை புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி: வங்கக்கடலில் குலாப் புயல் உருவாகி விட்டதாகவும் இன்று மாலை புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த தாழ்வழுத்த மண்டலம் தற்போது புயலாக மாறியிருக்கிறது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டு உள்ளது. புயலுக்கான பெயரை பாகிஸ்தான் சூட்டியிருக்கிறது.

புயலாக மாறியிருக்கும் குலாப் இன்று மாலை மேற்கு நோக்கி நகர்ந்து கோபால்பூருக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அம்மாநில மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

முன்னெச்சரிக்கை பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினுடைய 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு காற்றின் வேகம் 75 கிமீ முதல் 95 கிமீ வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வு. கடைசியாக 2005ம் ஆண்டு பியார் என்ற புயலும் பின்னர் 2018ம் ஆண்டு டாயி என்ற புயலும் உருவானது குறிப்பிடத்தக்கது.

click me!