பிரதமரின் சொத்து மதிப்பு இவ்வளவோ…? பார்த்தால் ஆச்சரியப்படுவீங்க…!

Published : Sep 26, 2021, 07:11 AM IST
பிரதமரின் சொத்து மதிப்பு இவ்வளவோ…? பார்த்தால் ஆச்சரியப்படுவீங்க…!

சுருக்கம்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 22 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.

டெல்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 22 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.

நாட்டின் பிரதமராக மோடி பதிவியேற்றது முதல் ஆண்டுதோறும் அவர் தமக்கு இருக்கும் சொத்துகளின் விவரங்களை இணையத்தில் தவறாது வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது உள்ள சொத்து விவரங்கள் வெளியிடடுப்பட்டு உள்ளன. இது 2020-2021ம் நிதியாண்டுக்கான சொத்து விவரங்கள் ஆகும்.

வெளியிடப்பட்டு உள்ள சொத்து விவரங்களின்படி, அவரது சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 22 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது அவரது மொத்த சொத்து மதிப்பு 3.07 கோடியாகும். மார்ச் 31ம் தேதி நிதியாண்டின்படி, வங்கியில் 1.5 லட்சம் முதலீடு, 36 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் இருக்கிறது.

குஜராத் காந்தி நகரில் அவரின் நிரந்தர வைப்பு தொகையானது ரூ.1.64 கோடியில் இருந்து 1.86 கோடியாக அதிகரித்து உள்ளது. இதுவரை எந்த கடனும் இல்லை. அதேபோல் பங்கு சந்தைகளில் எந்த முதலீடும் இல்லை, சொந்த வாகனமும் இல்லை என்று சொத்து பற்றிய விவரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!