ஆபரேஷன் காவேரி: இந்தியர்களுக்கு எதுவும் ஆகாது.! மீட்கப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி பேச்சு

Published : May 07, 2023, 05:54 PM IST
ஆபரேஷன் காவேரி: இந்தியர்களுக்கு எதுவும் ஆகாது.! மீட்கப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி பேச்சு

சுருக்கம்

ஆபரேஷன் காவேரி நடவடிக்கையின் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் அங்கிருந்து  ஆபரேஷன்  காவேரி நடவடிக்கையின் கீழ் வெளியேற்றப்பட்ட கர்நாடகாவின் ஷிவமோக்காவில் உள்ள ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

சூடானில் இருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹக்கி பிக்கி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 31 பேர் அடங்குவார்கள். பிரதமர் மோடி உடனான உரையாடலின் போது, வெளியேற்றப்பட்டவர்கள் பிரதமருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டினர். ஹக்கி பிக்கி பழங்குடியினர் சூடானில் அவர்கள் எதிர்கொண்ட சவாலான சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கமும் இந்திய தூதரகமும் எவ்வாறு ஆதரவை வழங்கியது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

ஹக்கி - பிக்கி என்பது கர்நாடகாவில் உள்ள நாடோடி சமூகமாகும். இது அவர்களின் பாரம்பரிய தாவர மற்றும் மூலிகை அடிப்படையிலான மருத்துவ முறைகளுக்கு பெயர் பெற்றது. அவர்கள் ஆழமான காடுகளில் வாழ்ந்து, பறவைகள் பிடிக்கும் சமூகங்கள், அவர்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளையும் பேசக்கூடியவர்கள்.

மேலும், குஜராத்திக்கு ஒத்ததாகக் கூறப்படும் வக்ரிபூலி எனப்படும் அவர்களின் சொந்த பேச்சுவழக்கையும் பேசக்கூடியவர்கள். சில நம்பிக்கைகளின்படி, அவர்களின் முன்னோர்கள் கடந்த கால படையெடுப்புகளைத் தொடர்ந்து குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். பழங்குடியினரின் மருந்துகள் கர்நாடகாவின் நகரங்களில் வாழும் மக்களாலும் நம்பப்படுகின்றன.

பிரதமரின் முயற்சிகளுக்காக அவர்கள் குறிப்பாகப் பாராட்டினர். ஒரு கீறல் இல்லாமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாகக் குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் அவரை நோக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகம் முழுவதிலும், எந்த ஒரு இந்தியருக்கும் எந்த விதமான சிரமம் ஏற்பட்டாலும், அந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசு ஓயாது.

சில அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயன்றார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் அமைதியாக வேலை செய்தது. தங்களுக்கு ஆதரவாக நின்ற நாட்டின் வலிமையை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவவும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பங்களிக்கவும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.

இதையும் படிங்க..சார்லஸ் முடிசூட்டு விழாவில் பைபிள் படித்த இந்து.. கோஹினூர் வைரம் என்னாச்சு!! இதை கவனிச்சீங்களா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!