Delhi-Mumbai Expressway: டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

By SG BalanFirst Published Feb 12, 2023, 12:42 PM IST
Highlights

டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் மிக நீண்ட சாலையாக அமைய உள்ள டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 246 கீ.மீ. வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை 1,386 கி.மீ. நீளத்துக்கு இந்தியாவின் மிக நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைய உள்ளது. லட்சம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டெல்லி - மும்பை இடையான பயணத் தொலைவு 12 சதவீதம் குறையும். பயண நேரமும் பாதியாகக் குறையும்.

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலை மூலம் கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும்.

8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேற்கொள்ள இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்தச் சாலை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய இடம் வகிக்க உள்ளது.

Modi Jacket: பிரதமரின் பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்த தமிழக இளைஞர்

இத்திட்டத்தின் முதல் கட்டமாக டெல்லி - டெளசா – லால்சோட் நகரங்களை இணைக்கும் 246 கி.மீ. நீள வழித்தடம் ரூ.12,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று, ஞாயிற்றுக்கிழமை, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தச் சாலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்குச் பயணிக்கும் நேரத்தை 5 மணிநேரத்தில் இருந்து மூன்றரை மணிநேரமாகக் குறைக்கும்.

பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு, ஏடிஎம்கள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனை கடைகள், ஹோட்டல்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் போன்ற வசதிகளுடன் 93 இடங்களில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை வழியோர வசதிகளைக் கொண்டிருக்கும்.

உள்ளூர் கைவினைப்பொருட்கள், கைத்தறி, பழங்கள் மற்றும் காய்கறிகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிராம தொப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் வகையில் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் ஹெலிபேடுகள் அமைக்கபட்டு வருகிறது.

Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைது - அல்கொய்தாவுடன் தொடர்பு?

click me!