இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்த பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் புகழாரம்!

By Manikanda PrabuFirst Published Jun 28, 2023, 11:10 AM IST
Highlights

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

Quacquarelli Symonds (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 2024 வெளியிடப்பட்டுள்ளது. அதில், 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 41 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்திருந்த நிலையில், நடப்பாண்டில் அதன் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

தரவரிசைப் பட்டியலின்படி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாம்பே (IIT Bombay) இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் 149வது இடத்தை மும்பை ஐஐடி பிடித்துள்ளது. அதேபோல், உலகளவில் டெல்லி ஐஐடி 197ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

மேலும், ஐஐடி காரக்பூர் 271 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஐஐடி கான்பூர் 278, ஐஐடி மெட்ராஸ் 285, ஐஐடி கவுகாத்தி 364, ஐஐடி ரூர்க்கி 369ஆவது இடத்தை பிடித்துள்ளன. தரவரிசை பட்டியலின்படி, உலகின் முதல் 500 பல்கலைக்கழங்களில் டெல்லி பல்கலைக்கழகம் 407ஆவது இடத்தையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 427ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலானது, ஏற்கனவே உள்ள அளவீடுகளுடன் நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு முடிவுகள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு ஆகிய மூன்று புதிய அளவீடுகளையும் சேர்த்து ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளதாக QS வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 24-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்.. எந்தெந்த மாநிலங்களில்? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..

“இந்தியப் பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அதன் செயல்திறன்களை நான் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு தரவரிசையில் 2900 நிறுவனங்களை மதிப்பிட்டுள்ளோம். அதில், இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. இது 297 சதவீதம் அதிகமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்தியப் பல்கலைக்கழங்களில் தொடர்ச்சியான, நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என QS இன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான Nunzio Quacquarelli கூறியுள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்துள்ளார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்று உலகத் தரத்தில் உள்ளன என்று மத்திய அமைச்சர் ராஜீவ்… pic.twitter.com/9snymQr7Ei

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

இந்த ஆண்டுக்கான QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டுக்கான QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்துள்ளார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்று உலகத் தரத்தில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Massachusetts Institute of Technology (MIT), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆகியவை உலக அளவில் முதல் மூன்று பல்கலைக்கழகங்களாக உள்ளன. உலகளவில் முதல் 10 இடங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 4ஆவது இடத்திலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 5ஆவது இடத்திலும், லண்டன் இம்பீரியல் கல்லூரி 6ஆவது இடத்திலும், ETH சூரிச் 7ஆவது இடத்திலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) 8ஆவது இடத்திலும், UCL 97ஆவது இடத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of California, Berkeley (UCB)) 10ஆவது இடத்திலும்  உள்ளன.

click me!