சீனா, பாகிஸ்தானுடன் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.!

By vinoth kumarFirst Published Oct 26, 2020, 11:01 AM IST
Highlights

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டதாக உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டதாக உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது. 

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்தது போல் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனும் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார் என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு உத்தரபிரதேச மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!