ரிசர்வ் வங்கி ஆளுநரையும் விட்டு வைக்காத கொரோனா... வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட சக்திகாந்த தாஸ்..!

By vinoth kumarFirst Published Oct 26, 2020, 9:22 AM IST
Highlights

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸும் இணைந்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தான். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோத்து கொள்ளவும். என்னுடைய பணிகளை தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து ஈடுபடுவேன். ரிசர்வ் வங்கி தொடர்புடைய பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். துணை ஆளுநர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என பதிவிட்டுள்ளார். 

click me!