பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஃபேஷன் ஆகிவிட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

By SG BalanFirst Published Apr 21, 2024, 10:00 AM IST
Highlights

“எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டால், முதலில் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, குடிமக்கள்தான். மக்கள் மீது அரசுகளுக்குப் பொறுப்புகள் உள்ளன. இது அரசியல் விளையாட்டுக்கான மைதானம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ், ஏசியாநெட் நியூஸ், கன்னட பிரபா மற்றும் ஏசியாநெட் நியூஸ்.காம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணலில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் தட்டிக்கழிப்பதாக எழுந்துள்ள விமர்சனத்தை பிரதமர் மோடி தகர்த்துள்ளார். வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாஜக அரசின் செயல்பாடுகள் பற்றியும் பேசி இருக்கிறார்.

கர்நாடகாவுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் கூறினார்.

“எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டால், முதலில் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, குடிமக்கள்தான். மக்கள் மீது அரசுகளுக்குப் பொறுப்புகள் உள்ளன. இது அரசியல் விளையாட்டுக்கான மைதானம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

“மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.900 கோடி கர்நாடகாவுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த பாக்கியும் வைக்கவில்லை. இயற்கை பேரிடர்களுக்கான குழுவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறது. பாதிப்புகளைக் ணக்கிட்டு, அதிக நிதி தேவைப்படும் சூழ்நிலை இருந்தால்தான் நிதி வழங்கப்படுகிறது.

PM MODI: ஆளுநர் மாளிகை குண்டுவீச்சு முதல் இலவசம் வரை ஏசியாநெட்டுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி

 

இன்று இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடைகளை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

கேரளாவில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை போனார்கள். நீதிமன்றம் அவர்களை கடுமையாகச் சாடி அறிவுரை கூறியது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யக்கூடும். ஆனால் உண்மை என்ன என்று அவர்களுக்கும் தெரியும்.

ஊடகங்கள் உண்மையை மட்டும் மக்கள் முன் முன்வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மத்திய மாநில அரசுகளின் நலனுக்காக இல்லாமல், நாட்டு மக்களின் நன்மைக்காக உண்மையைச் சரியாகச் சொல்ல வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கேரளாவில் காலூன்ற பா.ஜ.க கடுமையாக முயற்சி செய்கிறது என்றும் ஆனால் அது மிகவும் கடினம் என்றும் பேசப்படுவது குறித்தும் தன் கருத்துகளை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

“கேரளாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களின்போது, களப்பணி செய்தவர்களில் பலர் பாஜகவைச் சேர்ந்தவர்களே. கேரளாவில் இடதுசாரிகள் வாக்காளர்களை வஞ்சித்து வருவதை அங்குள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை” என்று மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%: தொகுதி வாரியாக முழுமையாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்

click me!