
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, குவைத் அரசு 'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. குவைத் பிரதமர் இன்று மோடிக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதை வழங்கினார்.
முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும்.
குவைத் பிரதமர் மோடிக்கு வழங்கிய இந்த விருது, இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவின் அடையாளமாக கருதப்படுகிறது. 'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' என்பது குவைத்தின் மிக உயரிய விருதாகும். இந்த விருது நட்புறவின் அடையாளமாக நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு மன்னர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா-குவைத் உறவில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: பிரதமர் மோடி உறுதி
பிரதமர் மோடியின் குவைத் பயணம் இருநாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எண்ணெய் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக குவைத் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் 87 ரூபாய் சேமித்தால் 11 லட்சம் கிடைக்கும்! இப்படி முதலீடு செய்யுங்க!