DHL courier QR code scam : DHL கொரியரில் தற்போது க்யூ ஆர் கோடு மூலம் நூதன முறையில் நடக்கும் மோசடி பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பொருட்களை வெவ்வேறு ஊருகளுக்கோ, மாநிலத்திற்கோ அல்லது நாடுகளுக்கோ அனுப்ப கொரியர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேமஸ் ஆன கொரியர் நிறுவனமாக DHL இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் பெயரில் நடக்கும் நூதன மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த மோசடி அதிகளவில் நடக்கிறதாம்.
கொரியர் மூலம் ஒரு பொருளை அனுப்பினால் அது சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கும் போது அவர்களுக்கு கொரியர் டெலிவரி செய்பவர் போனில் அழைப்பார். ஒரு வேளை அந்த நேரத்தில் நீங்கள் அழைப்பை ஏற்காவிட்டால், அந்த கொரியர் மீண்டும் சேமிப்புக் கிடங்குக்கே கொண்டுசெல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடுவார்கள். பின்னர் அந்த பொருளை சம்பந்தப்பட்ட நபர் மீண்டும் வாங்க ஒரு வழிமுறை இருக்கும்.
undefined
அப்படி DHL நிறுவனம் யாரேனும் டெலிவரி வாங்காவிட்டால் அவர்களுக்கு க்யூ ஆர் கோடு உடன் கூடிய ஒரு குறிப்பேடு ஒன்று அனுப்பப்படும். அந்த குறிப்பேடு மூலம் தான் தற்போது நூதன மோசடி நடக்கிறது. போஸ்ட் கார்டு சைஸில் இருக்கும் அந்த தவறவிட்ட டெலிவரிக்கான குறிப்பேடில் DHL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கான லிங்கும், இருக்கும். அது நேரடியாக DHL இணைய பக்கத்துக்கு கொண்டு செல்லும். ஒரு வேலை அதில் உள்ள லிங்கை போட்டபின்னர் அது வேறொரு பக்கத்துக்கு சென்றால் உடனடியாக DHL-ஐ அனுகுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோல் தவறவிட்ட டெலிவரியை மீண்டும் பெற DHL எந்தவித கட்டணமும் வசூலிக்காது. ஒருவேலை கட்டணம் செலுத்த சொன்னால் அது போலியான தளம் என்பதையும் நீங்கள் கண்டறிய முடியும் என்றும் DHL சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருவேளை தவறவிட்ட டெலிவரிக்கான குறிப்பேடு வந்திருந்தால், உடனடியாக DHL இணைய பக்கத்திற்கு சென்று அதில் உள்ள Waybill எண்ணை பதிவிட்டு பார்த்தால் அது உண்மையானதா இல்லை போலியானதா என்பது தெரிந்துவிடும். உண்மையானதாக இருந்தால் உங்களது விவரங்கள் அனைத்தும் காட்டும், போலியானதாக இருந்தால் எதுவும் காட்டாது. இந்த மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்குமாறு DHL நிறுவனமும் தங்கள் எக்ஸ் தளம் வாயிலாக அறிவுறுத்தி உள்ளது.
[Advisory] Since yesterday, we have received a few queries regarding this Not-at-Home card. We would like to clarify that this card is legitimate. Kindly scroll through the carousel for more information. pic.twitter.com/knZi16TvjO
— DHL Express India (@DHLExpressIndia)