2.1 கி.மீ. தூரத்தில் சிக்னலை இழந்த சந்திரயான் 2... இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 6:34 AM IST
Highlights

 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது தகவல்  தொடர்பு சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியும் முடிவு பெறாமல் போனது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.
 

இதுவரை நாம் சாதித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும் ஆறுதலும் தெரிவித்துள்ளார்.


 நிலவின் தென் துருவ பகுதியை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், படிப்படியாக நிலவை நெருங்கியது. விணகலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி இன்று அதிகாலை பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது தகவல்  தொடர்பு சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியும் முடிவு பெறாமல் போனது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வைக் காண இஸ்ரோ மையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைப் பாராட்டிவிட்டு சென்றார். பின்னர் ட்விட்டரில், பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். “இதுவரை நாம் சாதித்திருப்பது மிக சாதாரணமான விஷயம் அல்ல. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் எப்போதும் உண்டு. நீங்கள் நாட்டுக்கு மிகப் பெரிய சேவையை செய்துள்ளீர்கள். நீங்கள் தைரியமாக இருங்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

click me!