நிலவின் தென் துருவத்தில் அதிகாலை 1.40 க்கு லேண்ட் ஆகும் சந்திரயான் – 2 !! சரித்திரம் படைக்கும் இஸ்ரோ !!

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 11:56 PM IST
Highlights

இந்திய விஞ்ஞானிகளின் சாதனைப் படைப்பான சந்திரயான் – 2 நிலவின் தென் துருவத்தில் இன்னும் சற்று நேரத்தில் லேண்ட் ஆகிறது. இந்த சரித்திர சானை நிகழ்வை பிரதமர் மோடி உள்ளிட்ட கோடிக்கணக்காக கண்கள் காண ஆவலுடம் எதிர்பர்த்திருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆராய கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் சுற்றியவாறு ஆய்வு செய்ய ஆர்பிட்டர் கலன், நிலவில் தரை இறங்க லேண்டர் கலன், நிலவின் தரை பகுதியில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் ஆகிய மூன்று கலன்கள் உள்ளது. 

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து அதில் இருந்த சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டபடி புவியின் சுற்றுவட்டப்பாதையை சுற்றிவந்தது. 6 முறை புவிவட்டப்பாதையில் சுற்றுவந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பு படங்களை எடுத்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

தொடர்ந்து, சீரான வேகத்தில் புவியின் சுற்றுவட்டப்பாதையை சுற்றிமுடித்த பிறகு ஆகஸ்ட் 14ம் தேதி நிலவை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கியது. அப்போது, நிலவின் வட்டப்பாதைக்கு ஏற்றவாறு விண்கலத்தின் வேகத்தையும், உயரத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து வந்தனர். 

இதையடுத்து, விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்த விண்கலத்தில் இருந்து நிலவில் தரை இறங்தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தநிலையில், லேண்டரின் வேகம் நிலவின் தென் துருவத்தில் தரை இறக்குவதற்கு ஏதுவாக படிப்படியாக குறைத்தும், மாற்றியும் அமைக்கப்பட்டது.

முதல்முறையாக விக்ரம் லேண்டரின் டிஆர்பிட் கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் முறையாக 3ம் தேதி டிஆர்பிட் குறைக்கப்பட்டது. தற்போது நிலவிற்கு மிகவும் நெருக்கமாக 35 கி.லோ மீட்டர் தூரத்தில் லேண்டர் கலன் உள்ளது. 

இதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முக்கிய நிகழ்வான 1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு அதிகாலை 1.40 மணியளவில் நடைபெற உள்ளது.
அப்போது, லேண்டரின் வேகத்தை மெல்ல, மெல்ல குறைத்து அதை நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக தரை இறக்குவார்கள். இது தான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான மற்றும் சவால் நிறைந்த பணியாக விஞ்ஞானிகளுக்கு இருக்கும்.

இதையடுத்து, திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரை இறக்கப்பட்ட உடன் லேண்டரில் உள்ள 27 கிலோ எடை கொண்ட 6 சக்கர வாகனம் பிரக்யான் ரோவர் மெதுவாக நிலவின் தரை பகுதிக்கு கொண்டுவரப்படும். 

சரியாக அதிகாலை 5.30 மணிமுதல் 6.30 மணிக்குள் லேண்டரில் இருந்து மெல்ல இறங்கி நிலவில் தடம் பதிக்கும். பிரக்யான் ரோவர் நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட உடன் அதில் உள்ள சோலார் கருவி மின்சக்தி திறனை உள்வாங்கிக்கொண்டு நிலவின் மண்பரப்பை ஆய்வு செய்யும். 

பின்னர் கனிம வளங்கள், நிலவில் அதிர்வுகள் உள்ளிட்டவைகள் குறித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதன்மூலம், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நிலவின் தென் துருவ பகுதியை முழுமையாக தெரிந்துகொள்ள முழு உதவியாக இருக்கும்.

மொத்தம் நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும். 14 நாட்கள் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் உள்ள தகவல்களை எடுத்து இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும். நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் விண்கலம் தரை இறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் 60 மாணவர்களுடன் நேரடியாக பார்வையிடுகிறார்.

click me!