திரவுபதி முர்மு தலைசிறந்த ஜனாதிபதியாக இருப்பார்.. அடித்துக் கூறும் பிரதமர் மோடி..!

By Kevin KaarkiFirst Published Jun 21, 2022, 11:30 PM IST
Highlights

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

இந்தியாவில் குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருந்தார். 

இதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஜூன் 25 ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மேலும் செய்திகளுக்கு: பா.ஜ.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபது முர்மு... யார் தெரியுமா?

இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “ஸ்ரீமதி திரவுபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை ஏழை எளியோரின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறார். இவருக்கு தலைசிறந்த நிர்வாக அனுபவம் உள்ளது. இவர் நம் நாட்டின் தலைசிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என நம்புகிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் திரவுபது முர்முக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இன்றி, “ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவிப்பர் என நம்புகிறேன். நான் பா.ஜ.க. மற்றும் பிஜூ ஜனதா தளம் கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை வகித்து இருக்கிறேன்,” என திரவுபதி முர்மு தெரிவித்து இருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு: ஒரு தடவ தான் தவறும்... அன்று பறிபோன வாய்ப்பு இன்று தேடி வந்தது.. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!

click me!