விவசாயிகளே! பூச்சிகொல்லி தெளிப்பது இனி ஈஸி: 100 கிசான் ட்ரோன்களை அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்

Published : Feb 19, 2022, 12:08 PM IST
விவசாயிகளே! பூச்சிகொல்லி தெளிப்பது இனி ஈஸி: 100 கிசான் ட்ரோன்களை அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்

சுருக்கம்

வேளாண் நிலங்களில் பூச்சி கொல்லி தெளிக்கவும், இதர வேளாண் பயன்பாட்டுக்காகவும் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வேளாண் நிலங்களில் பூச்சி கொல்லி தெளிக்கவும், இதர வேளாண் பயன்பாட்டுக்காகவும் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ட்ரோன் விமானங்கள் பிரிவில் இந்தியா, உலகிற்கு புதிய தலைமையை ஏற்கும் திறன் இருக்கிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் “ விவசாயிகளுக்குஉதவுவதற்காக ட்ரோன் விமானங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பூச்சி கொல்லிகள் தெளிக்கவும், உரங்கள் இடவும், நிலங்களை அளக்கவும், சர்வே செய்யவும் முடியும்” எனத் தெரிவித்தார்

இதன்படி, வேளாண் பயன்பாட்டுக்காக 100 கிசான் ட்ரோன்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பாட்டுக்குவரும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் விமானங்கள் மூலம் விளை நிலங்களில் பூச்சி கொல்லிகள் தெளிக்க முடியும், உரங்கள், விதைகளை தூவ முடியும், நிலத்தை அளவிடலாம், பயிர்சேதங்களை மதிப்பிடலாம். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் “ இந்தியாவில் புதிய கலாச்சாரமான ட்ரோன் விமானங்களுக்கான ஸ்டார்ட் அப் தயாராகிவிட்டது. இப்போது 200ஆக இருக்கும் எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக மாறும். வரும் எதிர்காலத்தலைமுறையினருக்கு மிகப்பெரியஅளவில் வேலைவாய்ப்பை இந்ததுறை வழங்கிடும். ட்ரோன் துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இருக்காது என்பதை அரசு  உறுதி செய்யும், அதனை உயர்த்த ஏற்கனவே பல சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கொள்கைகள் சரியாக இருந்தால், ஒரு தேசம் உயரப்பறக்க முடியும் என்பதற்கான உதாரணம். இந்த ட்ரோன்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்பு துறையில் மட்டும் இருந்தது இப்போது வேளாண் துறைக்கு வந்துவிட்டது

இது, 21-வது நூற்றாண்டில் புதிய நவீன வேளாண் வசதிகளை வழங்கும் புதிய அத்தியாயம். ட்ரோன் விமானங்களை உருவாக்கும் துறை வ ளர்ச்சிக்கான மைல்கல் மட்டுமல்ல, ஏராளமான வாய்ப்பைகளை திறந்துவிடுவதாகும். 

ட்ரோன் துறையை திறந்துவிடுவதில் அச்சப்பட்டு நேரத்தை வீணாக்க அரசு விரும்பவில்லை. இளைஞர்கள் புதிய மனநிலையுடன் முன்நோக்கி நகர  வேண்டும். பட்ஜெட்டில் தொழில்நுட்பத்துக்கும், புத்தாக்கத்துக்கும் எனது அரசு முன்னுரிமைகளை வழங்கியுள்ளது. 
மருந்துகளை கொண்டு செல்லுதல், தடுப்பூசிகளை கொண்டு செல்லுதல், உரமிடுதல், பூச்சி கொல்லி தெளித்தல் நிலங்களை அளவிடுதல், ஆவணங்களை உருவாக்குதல் போன்றவற்றில் சம்விதா யோஜனா எனும் ட்ரோன் திட்டம் பயன்படும்

இவ்வாறு மோடி தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!