சிஏஏ போராட்டக்காரர்களிடம் பெற்ற பணத்தை திருப்பிக்கொடுங்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published : Feb 19, 2022, 09:55 AM IST
சிஏஏ போராட்டக்காரர்களிடம் பெற்ற பணத்தை திருப்பிக்கொடுங்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியபோது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி போராட்டக்காரர்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான பணத்தையும், முடக்கப்பட்ட சொத்துக்களையும் திருப்பிக் கொடுங்கள் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியபோது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி போராட்டக்காரர்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான பணத்தையும், முடக்கப்பட்ட சொத்துக்களையும் திருப்பிக் கொடுங்கள் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த2019ம் ஆண்டு நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த சேதங்களுக்கு போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு பெறப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்தது.

இதன்படி 274 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இழப்பீடு கோரப்பட்டது. பலரிடம் இருந்து உ.பி. அரசு சார்பில் இழப்பீடு பெறப்பட்டது, இழப்பீடு தரமுடியாதவர்களிடம் இருந்து சொத்துக்களை முடக்கி வைத்தது. உ.பி. அரசின் இந்த நோட்டீஸை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் பர்வேஸ் ஆரிஃப் டிட்டுஎன்பவர் சார்பில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வு விசாரித்தது வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ போராட்டக்காரர்களுக்கு வழங்கிய நோட்டீஸை உ.பி. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், நோட்டீஸை ரத்து செய்ய உத்தரவிட வேண்டியதிருக்கும்” என்று எச்சரித்தனர். 

இந்த நோட்டீஸ் பெறப்பட்டவர்களில் 90வயது நிரம்பிய முதியவர், பெண்கள், , மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இருந்தனர். 
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பி. அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் கரிமா பிரசாத் ஆஜராகினார்.

அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த பதிலில் “ போராட்டக்கார்களுக்கு உ.பி. அரசு வழங்கிய 274 நோட்டீஸ்களையும், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஆனால், அவர்களிடம் இருந்து இழப்பீட்டுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப அளிக்க உத்தரவிடக்கூடாது. இந்த வழக்குகள் அனைத்தும் உ.பி. பொது,தனியார் சொத்து சேதமீட்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் “ போராட்டக்காரர்களிடம் மீது தொடர்பட்ட வழக்கையும், நோட்டீஸையும் திரும்பப் பெறுவதாக நீங்கள்தெரிவித்தபோதே அவர்களிடம் இருந்து வசூலித்த பணத்தையும், முடக்கிய சொத்துக்களையும் திருப்பி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சட்டவிரோதம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு உ.பி. அரசின் வழக்கறிஞர் பிரசாத் கூறுகையில் “ பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு பெறப்பட்ட தொகையை திருப்பி அளித்தால் அது எதிர்காலத்தில் தவறான செய்தியாக மக்களுக்குச் சென்றுவிடும். அனைத்து நடவடிக்கையும் சட்டவிரோதமாகிவிடும். எதிர்காலத்தில் எந்த விதமான இழப்பீடும் பெற முடியாது. முடக்கப்பட்ட சொத்துக்களை மட்டும் விடுவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்

இதற்கு நீதிபதி சந்திரசூட், “ நீங்கள் நீதிமன்றத்தில் முதலில் என்ன கூறினீர்கள். போராட்டக்கார்ரகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுகிறோம், நோட்டீஸைத் திரும்பப் பெறுகிறோம்எனத் தெரிவித்தீர்கள். ஆனால், அவர்களிடம் இருந்து வசூலித்த பணம், முடக்கப்பட்ட சொத்துக்களை மட்டும் விடுவிக்கமாட்டீர்களா.

நீங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டால் அதன்டி நடக்கவேண்டும். நோட்டீஸை திரும்பப்பெற்றுவிட்டாலே சொத்துக்களையும்,பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். தேர்தல்நடத்தவிதிகள் நடைமுறையில் இருந்தால் என்ன, உங்கள் நடவடிக்கையை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதை எந்தவிதத்திலும் தேர்தல்விதிகள் கட்டுப்படுத்தாது. ” எனத் உத்தரவிட்டார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!