நாளை பிரதமர் மோடியின் பிறந்தநாள்… குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளின் விவரம் இதோ!!

By Narendran SFirst Published Sep 16, 2022, 6:04 PM IST
Highlights

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு நிகழ்வுகளை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

பிரதமர் மோடியின் 73 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குஜராத் பாஜக 15 நாட்களுக்கு சேவா பக்வாடா என்னும் விழா ஏற்பாடு செய்ய உள்ளது. சேவா பக்வாடாவின் ஒரு பகுதியாக நடைபெறவிருக்கும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, உலக சாதனை முயற்சியாக நாளை குஜராத் முழுவதும் 579 இடங்களில் இரத்த தானம் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அகமதாபாத்தில் உள்ள ரவிசங்கர் ராவல் ஆர்ட் கேலரியில், துபாயைச் சேர்ந்த அக்பர் வரைந்த பிரதமர் மோடியின் ஓவியங்களை முதல்வர் படேல் திறந்து வைக்கிறார். அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய இடங்களில் தலா ஒரு வாரத்துக்கு ஓவியக் கண்காட்சி நடைபெறும்.

செப்டம்பர் 20 ஆம் தேதி, பாஜகவின் தேசியத் தலைவர் திரு ஜே பி நட்டா முன்னிலையில், பாஜக கிசான் மோர்ச்சா குஜராத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 14,500 கிராமங்களில் நமோ கிசான் பஞ்சாயத்தை தொடங்கவுள்ளது. இது செப்., 30ம் தேதி வரை நடைபெறும்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!

செப்டம்பர் 20 ஆம் தேதி, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், பாஜக கிசான் மோர்ச்சா குஜராத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 14,500 கிராமங்களில் நமோ கிசான் பஞ்சாயத்தை தொடங்கவுள்ளது. இது செப்.30ம் தேதி வரை நடைபெறும்.

செப்டம்பர் 21 ஆம் தேதி சுமார் 75,000 சிறுமிகளுக்கு 750 இடங்களில் ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்படும். தேவையான மருந்துகளையும் கட்சி வழங்கும். மகிளா மோர்ச்சா மற்றும் டாக்டர் செல் ஆகியவை இந்த இயக்கத்தை கவனித்துக் கொள்ளும். 

பண்டிதரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தீன்தயாள் உபாதாயாயின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து வரும் 25 ஆம் தேதி பாஜகவின் அனைத்து பூத் ஊழியர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

மாநில தலித் பெண்களுக்காக நாரி சக்தி வந்தனா நிகழ்ச்சி நடத்தப்படும். விழாவுக்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள். அதே நாளில், 40 எஸ்டி/எஸ்சி இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி, மகிளா மோர்ச்சா குஜராத் பல்கலைக்கழகத்தின் கன்வென்ஷன் ஹாலில் ஹலோ கமல் சக்தி என்ற இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த விழாவிற்கு திருமதி ஸ்மிருதி இரானி தலைமை தாங்குகிறார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஸ்வச்தா அபியான் என்னும் திட்டத்தின் கீழ் ஆறுகள், குளங்கள், சாலைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்த பாஜக தொண்டர்கள் 4 முதல் 5 மணிநேரம் வரை பங்களிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளின் காதி கொள்முதல் இயக்கம் மற்றும் கண்காட்சி 41 இடங்களில் பாஜக அலுவலகங்களில் நடைபெறும்.

click me!