
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உணவகம் ஒன்றில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட தாலி அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு அதனை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதர் மோடியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி டெல்லியின் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ARDOR 2.0 உணவகம் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக தட்டு ஒன்றை வழங்கவுள்ளது. இதுக்குறித்து அந்த உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பற்றி பேசுகையில், பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர், அவருடைய பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை அவருக்குப் பரிசளிக்க விரும்புகிறோம்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200 பரிசுப் பொருட்கள் 17ம்தேதி ஏலம்: என்னென்ன தெரியுமா?
அதனால்தான் இந்த பிரமாண்ட தாலியை வெளியிட முடிவு செய்தோம். அதற்கு '56 இன்ச் மோடி ஜி தாலி' என்று பெயரிட்டுள்ளோம். இதனுடன், 'நாங்கள் அவருக்கு இந்த தட்டை பரிசளிக்க விரும்புகிறோம், அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை செய்ய முடியாது. எனவே அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த சிறப்பு தாலி வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் வழங்கும். தம்பதிகளில் யாராவது 40 நிமிடங்களில் இந்த பிளேட்டை முடித்தால், அவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசாக வழங்குவோம்.
இதையும் படிங்க: “விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?
மேலும், செப்டம்பர் 17 முதல் 26 வரை இந்த தாலியை சாப்பிட வருபவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி அல்லது தம்பதியினர் கேதார்நாத்தை தரிசிக்க டிக்கெட் பெறுவார்கள். ஏனெனில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரையிலான காலத்தை டெல்லி பாஜக 'சேவா பக்கவாடா' என்று கொண்டாடும். அதனுடன், இந்த காலகட்டத்தில் சுகாதார பரிசோதனை மற்றும் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.