பள்ளிப்பாட புத்தகத்தில் மக்களின் கதாநாயகன் அபிநந்தன்...!

By vinoth kumarFirst Published Mar 5, 2019, 5:58 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பாக 
அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பாக அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் அறிவித்துள்ளார். 

காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஃஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர் உள்ளிட்ட தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு தகவல் வெளியாகின. ஆனால் இதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது.

இதனையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த எப் 16 பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, எதிர்தாக்குதலால் அபிநந்தன் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர். எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார். கடந்த 1-ம் தேதி இரவு வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பியவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இந்நிலையில் அபிநந்தனின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டும் வகையில் நாடு முழுவதும் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அவரது பெயரை சூட்டி மகிழ்ந்தனர். மேலும் அவரை போலவே நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அருவா மீசைக்கு மாறி வருகின்றனர்.

வடமாநிலங்களில் அபிநந்தன் உருவம் பொறித்த சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேசப்பற்றின் சின்னமாக, மக்களின் கதாநாயகனாக அபிநந்தன் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், அபிநந்தனின் பாகிஸ்தான் எபிசோட் விரைவில் பாட புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

click me!