கசிந்தது பாலாகோட் ரகசியம்..! எத்தனை பேர் கொல்லப்பட்டனர்..? வெளியான ஆடியோ..!

By ezhil mozhiFirst Published Mar 5, 2019, 4:31 PM IST
Highlights

பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலாகோட்டில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளை வான் வழி தாக்குதல் மூலம் அழித்தது இந்தியா. இந்த தாக்குதலில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற அதிகார பூர்வமான தகவல் வெளியாக வில்லை. 

பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலாகோட்டில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளை வான் வழி தாக்குதல் மூலம் அழித்தது இந்தியா. இந்த தாக்குதலில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற அதிகார பூர்வமான தகவல் வெளியாக வில்லை. என்றாலும் 250 கும் அதிகமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர் என பரவலான கருத்து நிலவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த இந்திய விமான படை தளபதி, பிஎஸ் தனோவா, தாக்குதல் நடத்தும் போது இலக்கு சரியாக இருந்ததா..? சரியான இலக்கில் தாக்குதல் நடத்தபட்டதா..? அல்லது இலக்கு தவறியதா என்று மட்டும் தான் பார்க்க முடியும்.. அப்போது அங்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கணிக்கிட முடியாது என தெரிவித்து இருந்தார்.

இதே போன்று, இந்திய விமான படை ஏர்வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், பயங்கரவாத முகாம் மீது தாக்கப்பட்டதற்கு, சரியான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பு உடனான ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளதாகவும், அந்த ஆடியோவில் பயங்கரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தபட்டதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளதாக பாகிஸ்தானிய இதழில் வெளிவந்துள்ளது.

இதே போன்று, இத்தாலியை சேர்ந்த செய்தியாளர் தெரிவித்துள்ள விவரத்தின்படி, இந்தியா நடத்திய தாக்குதலில் 40 முதல் 50 பேர் வரை இறந்திருப்பதாகவும், 35 முதல் 40 பேர் வரை காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ ஊழியர்களின் கையில் இருந்த அனைத்து மொபைல் போனையும் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க அனுமதித்ததாகவும் அப்போது, கிட்டத்தட்ட 35 உடல்கள் வெளி கொண்டுவர பட்டதாகவும் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அரசிடம் இருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து முழு விவரம் வெளியிடவில்லை என்றாலும், தாக்குதல் நடத்தியது உண்மை தான் என சர்வதேச நாடுகளை சேர்ந்த செய்தியாளர்  தரும் தகவலில் இதுபோன்ற முக்கிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.

click me!