ரூ.40 க்கு பெட்ரோல்... பிளாஸ்டிக் குப்பையில் தயாரித்து அசத்தல்..!

Published : Jun 29, 2019, 03:54 PM IST
ரூ.40 க்கு பெட்ரோல்... பிளாஸ்டிக் குப்பையில் தயாரித்து அசத்தல்..!

சுருக்கம்

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார் கல்லூரி பேராசியர் சதீஷ்.

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார் கல்லூரி பேராசியர் சதீஷ்.

ஐதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சதீஷ். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பெட்ரோல் தயாரித்து வருகிறார். பிளாஸ்டிக் பைரோலிசிஸ் முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பெட்ரோல் தயாரித்துவரும் இவர், பல தொழிற்சாலைகளுக்கு அதனை 40லிருந்து 50 ரூபாய்க்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்.

இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் சதீஷ், ’’சுற்றுசூழலை பாதுகாக்கவே இதுபோன்ற புதிய முயற்சி செய்துள்ளேன். லாபத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 400 கிலோ பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் பெட்ரோல் தயாரிக்க முடியும்.

அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்க முடியும். பிளாஸ்டிக் பைரோலிசிஸ் முறை மூலம் பிளாஸ்டிக்கை, பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷின் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: ஜெய்ப்பூரில் இரண்டு நாள் கூட்டம்! எப்போது அமலுக்கு வரும்? நிபுணர்கள் சொல்வது என்ன?
Forbidden Island: உள்ளே போனால் உயிரோட திரும்ப முடியாது! இந்தியாவின் பயங்கரமான தீவின் ரகசியம்