கோர விபத்து... பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து 11 மாணவர்கள் உயிரிழப்பு..!

Published : Jun 27, 2019, 06:22 PM IST
கோர விபத்து... பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து 11 மாணவர்கள் உயிரிழப்பு..!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் மினி பேருந்தில் ஒன்றில் இன்று சென்று கொண்டிருந்தனர். சோபியான் மாவட்டம் அருகில் வந்துகொண்டிருந்த போது மினி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 9 மாணவிகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து ஆப்பத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எல்லா சட்டத்துக்கும் இந்தி பெயர்.. இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் பாஜக.. ப.சிதம்பரம் காட்டம்!
டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!