தர்காவில் உயிரிழந்த பிச்சைக்காரர் எத்தனை லட்சம் வைத்திருந்தார் தெரியுமா..?

Published : Jun 27, 2019, 02:56 PM IST
தர்காவில் உயிரிழந்த பிச்சைக்காரர் எத்தனை லட்சம் வைத்திருந்தார் தெரியுமா..?

சுருக்கம்

ஆந்திராவில் தர்காவின் வெளியே உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிச்சைக்காரரின் பையில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

ஆந்திராவில் தர்காவின் வெளியே உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிச்சைக்காரரின் பையில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். 

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்த பஷீர் சாப் (75). கடந்த 10 ஆண்டுகளாக தர்காவின் வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். தர்காவுக்கு வருபவர்கள் பஷீருக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் உணவுகளையும் கொடுத்து வந்தனர். பிச்சை எடுத்த சில்லறை காசுகளை இரவு அங்குள்ள கடைக்காரர்களிடம் கொடுத்து ரூபாய் நோட்டுகளாக வாங்கி வைத்து சேமித்து வந்துள்ளார். 

கடந்த சில நாட்களாவே பஷீர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பஷீர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆழ்ந்த தூக்கித்தில் இருப்பதாக நினைத்தனர். ஆனால் மாலை வரை அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பஷீரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது. இத தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பஷீரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், போலீசார் பஷீர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்துள்ளது. உயிரிழந்த பஷீரின் உறவினர்கள் குறித்து தகவல் கிடைக்காததால் அவரது உடலை தர்கா நிர்வாகத்தினரே அடக்கம் செய்தனர். பஷீரிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை தர்கா நிர்வாகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"