
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் பெட்ரேல் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் விதமாக முதல் கட்டமாக சண்டிகர், ஜாம்ஷெட்பூர், உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் சோதனை அடிப்படையில் கடந்த மே 1 ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் நாள்தோறும் பெட்ரோல் டீசலின் விலை மாற்றியமைக்கப்படவுள்ளது. காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே இரு முறை கட்டணம் நிர்ணயிக்கப்படும் முறையின் படி நேற்றிரவு நள்ளிரவு பெட்ரோல் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 காசுகளும், டீசல் 1.24 காசுகளும் குறைக்கப்பட்டன. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.