கிடு கிடுவென உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை !! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2019, 7:32 AM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்கா எண்ணெயின் சந்டித விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின்போது பெட்ரோல், விலை குறைந்தது.

அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக  விலை ஊறக் தொடங்கியது. தற்போது சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கம் எற்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.  இந்த நிலையில் இந்தியா முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை கடந்த 6  நாட்களில் ஏறத்தாழ 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து  ஒரு லிட்டர் 76.83 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 20 காசுகள்  உயர்ந்து ரூ.70.76 ஆக விற்பனையாகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.98 காசுகளும் டீசல் விலை ரூ.1.61 காசுகளும் உயர்ந்துள்ளன.

click me!