ஒரு வாரத்திற்குள் முன்னாள் முதல்வர் கெஸ்ட்ஹவுஸை இடித்து தள்ளுங்க... நாயுடுகாருக்கு ரெட்டிகாரு எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 22, 2019, 11:48 AM IST
Highlights

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பபியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பபியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக சந்திரபாபு நாயுடுக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் லிங்கமனேனி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா நதிக்கருகே தனியார் கெஸ்ட் ஹவுசில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மேலும், அவர் முதல்வராக இருந்தபோது மாநில முதல்வர் என்ற வகையிலும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையிலும் தற்போதைய ஆந்திர அரசு சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீட்டிற்கான வாடகையை செலுத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் கெஸ்ட்ஹவுஸ் உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட கெஸ்ட்ஹவுஸ்கள் கிருஷ்ணா நதி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கூறிய ஜெகன் மோகன் ரெட்டி அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது. 

கெஸ்ட்ஹவுசை காலி செய்ய ஏற்கனவே கால அவகாசம் மற்றும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் கெஸ்ட்ஹவுசுக்கு நேற்று காலையில் சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யக்கோரி மீண்டும் நோட்டீஸ் ஒட்டி சென்றனர். தவறினால் கெடு முடிந்த உடன் வீடு இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். 

click me!