"பெட்ரோல் விலை ரூ.2.37 அதிரடி உயர்வு" - "டீசலும் தப்பவில்லை" - ரூ.1.34 உயர்ந்தது...!!

 
Published : Oct 16, 2016, 11:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"பெட்ரோல் விலை ரூ.2.37 அதிரடி உயர்வு" - "டீசலும் தப்பவில்லை" - ரூ.1.34 உயர்ந்தது...!!

சுருக்கம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 காசுகள் உயர்ந்துள்ளன.

அமலுக்கு வந்தது

இந்த புதிய விலை மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"